பிளாஸ்டிக் எமன்


பிளாஸ்டிக் எமன்

ஜாதி மத பேதம் சொல்லி, டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்தது ஒரு காலாம். காலங்களும் மாறி காட்சிகளும் மாறி எல்லோரும் ஒர் இனமே என்ற நல்ல எதிர்காலத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். இரட்டைக் குவளை முறைகள் மனித இனத்தையும் மனிதத் தன்மையையும் பாழ் படுத்தியது போல, இன்னும் சில குவளைகள் நம் மண்ணை பாழ் படுத்திக் கொண்டிருக்கின்றன.

அது வேறு எதுவும் இல்லை, நீங்கள் தினமும் உபயோகப் படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் தான்.



தற்சமயம் இது சுகாதாரமாகவும், பயன் படுத்த எளிதாகவும், நமக்கு மிகவும் வசதியாகவும் தெரியலாம். நமக்கு இந்த பிளாஸ்டிக் டம்ளர்கள் சில நிமிட பயணைத் தந்து விட்டு, எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு இந்த மண்ணுக்கு தீராத தீங்கை தரப் போவது என்பது உன்மை.

இந்த டம்ளர்கள் மண்ணில் புதைந்து போகும் போது மழை நீர் மண்ணில் புகாத வண்ணம் அடைத்துக்கொள்கிறது, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது.

இவற்றை எரிக்கும் போது கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயுக்களை வெளியிட்டு நம் சுவாசம் மூலம் நமக்கும் தீங்கு இழைக்கிறது.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் இந்த பிளாஸ்டிக் டம்ளர்களால் நமக்கு கிடைக்கும் நன்மை என்பது சொற்பம், தீமை என்பது ஏராளம். இந்த பிளாஸ்டிக் டம்ளர்கள் உபயோகத்தை குறைப் போம். சரி எப்படி குறைப்பதுன்னு கேக்குறீங்களா.

*
டீ கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் பிளாஸ்டிக் டம்ளர் வேண்டாம் என்று சொல்லுங்கள்

*
ஒயின் ஷாப்பில் சோடா மிக்ஸ் பண்ணாமல் ராவாக அடிக்கவும். சோடா மிக்ஸ் பண்ணும் போது தானே டம்ளர் தேவைப் படுது. ராவா அடிச்சா உங்க உடம்புக்கு மட்டும் தான் கேடு, மிக்ஸ் பண்ணி அடிச்சா இந்த மண்ணுக்கும் கேடு, நியாபகம் வச்சுக்குங்க.

* திருமண வீடுகளில் உணவு பரிமாறும் போது பந்தாவாக பிளாஸ்டிக் டம்ளர் உபயோகிக்காமல் சாதரன டம்ளர்களை உபயோகிக்கலாம்.
* அலுவகங்களிலும் மற்ற தவிர்க்க முடியாத இடங்களிலும் பிளாஸ்டிக் டம்ளர்களுக்கும் பதிலா பேப்பர் கப்புகளை உபயோகிக்கலாம்.

தல இங்க சொன்ன விஷம் சாதாரண விஷயம் இல்ல, இதன் தீவிரத்தை நாம் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்குள் நம்மிடையே விழிப்புணர்வு வேண்டும்.


இன்றைய நம் அலட்சியம் நாளைய நம் தலைமுறைக்கு செய்யும் துரோகம்.