நாங்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்?
உபயோகிக்க எளிது, உடையாது. இந்த இரு காரணிகளால் ப்ளாஸ்டிக் அனைவராலும் பெரும் வரவேற்பிற்கு ஆளானது.
இப்படித்தான் ப்ளாஸ்டிக் நம்ம வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா நுழைஞ்சு நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டிருக்கு. உதவிசெய்யறமாதிரி நைஸா வந்து இப்ப நமக்கே எமனா ஆகியிருக்கு. எப்பொழுது டீ கப்புகள் மற்றும் கேரி பேக்குகள் வந்ததோஅப்போது பிடித்தது வினை. முக்கியமான தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைவிட, பாலிதீன் பைகளைஉற்பத்தி செய்ய ஆரம்பிச்சப்பதான் எங்கும் பிளாஸ்டிக்.. எதிலும் பிளாஸ்டிக்ன்னு ஆகிப்போச்சு.
இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா ? சாட்சாத் பெட்ரோலியமேதான். உலகத்துலஇப்ப பெட்ரோலியத்துக்கு ரொம்பவே தட்டுப்பாடு இருக்குது. இந்த நிலையில், ஒவ்வொருமுறையும் நீங்க பிளாஸ்டிக்கைதூக்கிப்போடும்போதும் ஒரு முக்கியமான எரிசக்தியை வீணாக்குறீங்கன்னு ஞாபகப்படுத்திக்கோங்க.
அன்றாடம் நாம் உபயோகித்து தூக்கி எறியும் இவ்வகை ப்ளாஸ்டிக் பைகள் அவ்வளவு சீக்கிரம் அழிந்து போவதில்லை, மாறாகமண்ணிலேயெ தங்கி முதல் காரியமாக மழைத் தண்ணீர் பூமிக்குள் போகாமல் தடுக்கிறது. இதனால் என்னதான் மழைபொழிந்தாலும் மண்ணுக்குள் நீர் புகமுடியாமல் தடுத்து விடுகிறது. விளைவு? நிலத்தடி நீரின் அளவு தாழ்ந்து கொண்டேபோவதற்கு இந்த ப்ளாஸ்டிக் பைகளும் ஒரு பெரிய காரணமாக விளங்குகிறது. இதோடு நில்லாமல் இந்த ப்ளாஸ்டிக் பைகளைஇரை என நினைத்து முழுங்கும் பறவைகளும், விலங்கினங்களும், கடல் வாழ் உயிரினங்களும் அநியாயமாக இறக்கின்றன.
நம் வீட்டில் நிறைய ப்ளாஸ்டிக் பொருட்கள் இருக்கும் ஆனால் ப்ளாஸ்டிக்கில் பல வகைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும்எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்த முடியாது. இதனை சுலபமாக அறிய என்ன வழி? எல்லா பிளாஸ்டிக்குமே மறுசுழற்சிசெய்ய ஏத்தவை அல்ல. அதன் தன்மையைப்பொறுத்து ஏழு வகைகளா பிரிச்சிருக்காங்க. ஒவ்வொரு பொருட்களிலும் அதன்வகைக்குண்டான நம்பரை பொறிச்சிருப்பாங்க.
பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். ("Resin identification code" - 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும் [ப்ளாஸ்டிக்கிற்கும் ரீ-சைக்கிள் (மறுசுழர்ச்சி) முறையில் உருக்கி மறு பயன்பாட்டிற்காக பிரித்தறிய ஒரு எண் கொடுப்பார்கள்].இந்த எண்ணை வைத்து என்ன விதமான ப்ளாஸ்டிக் மேலும் எதற்க்காக உபயோகப்படுத்தலாம் என அறியலாம்.
1 - பெட் பாட்டில்கள் (PET)
இது பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் குளிர்பானம், தண்ணீர் எல்லா பாட்டிலும் PET எனப்படும் இந்த வகை ப்ளாஸ்டிக்கினால்ஆனதுதான்.
2- HDPE (High density Poly ethylene)
லிக்விட் டிடர்ஜெண்ட், ஷாம்பூக்கள், பைகள், தண்ணீர், ஷாம்பூ, மோட்டார் ஆயில்கள், ஜூஸ் மற்றும் பால் போன்றவை இதில் அடைக்கப்பட்டு வருது
3 – PVC ( Poly vinyl chloride)
சமையல் எண்ணெய், வீடு சுத்தம் செய்ய பயன்படும் க்ளீனர்கள், டிடர்ஜெண்ட், உணவு பேக் செய்யப்படும் பொருள் போன்றவை இதில் பாக் செய்யப்படுது.மற்றும் குழாய்கள், மருத்துவ உபகரணங்களும் இதில் தயார்செய்யப்படுது. உடலுக்குபல வித தீங்குகளை விளைவிக்க கூடியது. Dioxin போன்ற பல நச்சு வாயுக்களை வெளிப்படுத்த கூடியது. சூடான பொருட்களைஇதில் வைக்க கூடாது.
4- LDPE ( Low Density poly ethylene)
உறையவைக்கப்பட்ட உணவுகள், ப்ரெட், இதெல்லாம் பொதிஞ்சு வருது. மேலும் கார்ப்பெட்டுகள், ஷாப்பிங் பைகளும் இதில் தயாரிக்கப்படுது. இந்த எண் உடைய ப்ளாஸ்டிக்குகள் ப்ரிஜ்ஜில் ( ப்ரீஸரில்) உபயோகப்படுத்த ஏற்றது
5 – Poly propylene
சிரப், கெச்சப், மருந்துபாட்டில்கள்,யோகர்ட் டப்பாக்கள் இதில் தயாரிக்கப்படுது. குழந்தைகளுக்கான பாட்டில், சூடானபொருட்கள் வைக்க, மற்ற பொதுவான உணவு பண்டங்கள் வைக்க ஏற்றது. மைக்ரோ வேவிலும் உபயோக படுத்தலாம்.
6 – Polystyrene
சிடி உறைகள், டிஸ்போசபிள் தட்டுகள், கப்புகள், பானங்களுக்கான ஸ்ட்ராக்கள் தயாரிக்கப்படுது.
7 – Others
குறிப்பிட்டு வகைப்படுத்த முடியாது. ஆனாலும் உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. இதில் கம்ப்யூட்டர் பாகங்கள்,குளிர்கண்ணாடிகள், வாட்டர் பாட்டில்கள், ஐபாட், நைலான் போன்றவை அடங்கும்.
தூக்கி எறிந்து விடக்கூடிய ப்ளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை பல இடங்களில் எழுத்தளவில் மட்டுமே உள்ளது. பிளாஸ்டிக் இன்றி வாழ முடியாது. இருப்பினும் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே நாம் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்த வேண்டும். அதாவது யூஸ் & த்ரோ என்னும் கலாசசாரத்தினை விட்டொழிக்க வேண்டும்.
நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade plastics) இருந்தால்நிச்சயம் உங்கள் நீரும், அதை குடிக்கும் உங்கள் ஆரோக்கியமும் பாதுகாப்பாக உள்ளது. காரணம் 1- 4 வரை எண் உள்ளபாட்டில்கள் உணவு எடுத்து செல்லும் தகுதி உடையவை அல்ல. உணவு பொருட்கள் கொண்டு செல்லும் பிலாஸ்டிக்குகள்(தண்ணீர், உணவு, பழம், காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சரி) எப்போதும் 5 - 6 வரை எண் கொண்ட பிளாஸ்டிக்கா என பார்த்துவாங்குங்கள்(Food Grade Plastic). 1 - 4 எண் கொண்டவை உணவு கொண்டு செல்ல தகுதியானவை அல்ல. அவை வெப்ப சூழல்மாறும் போது கார்சினோஜென் (Carcinogens) எனப்படும் ஒன்றை வெளியிடுவதால் அதில் உள்ள உணவை உண்பவருக்குபுற்றுநோய் (Cancer) ஏற்பட காரணமாகிறது.
கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அது. எண்பதுகளின் ஆரம்பம்வரை, கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் எல்லோர் வீட்டிலும் நீக்கமற நிறைந்திருந்தது இந்தமஞ்சள் பை. தாம்பூலப் பையில் ஆரம்பித்து, மளிகை, ஜவுளி, மொத்த மற்றும் சில்லரை அரிசி வியாபாரம், என்றவிளம்பரத்துடன் கூடிய இந்தப் பை இலவசமாகவே எல்லோருக்கும் கிடைத்தது. கடைக்கு காய்கறி வாங்க செல்லும்போதுமறக்காமல் பை எடுத்து செல்லலாம். அந்த பை கூட பிளாஸ்டிக்காக இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் தினமும் அந்தபிளாஸ்டிக் பையினை உபயோகப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். டீ வாங்கும் சமயம் கண்ணாடி டம்ளரில் நன்குவென்னீரில் கழுவி டீ வாங்கி குடிக்கலாம். இதன் மூலம் மட்டுமே சுற்றுச்சுழல் மாசடைவதை தடுக்க இயலும்.
கூடிய வரை மரக்கன்றுகள் நடலாம். ஆம், கூடிய வரை மரக்கன்றுகள் நடலாம். தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை பயன்படுத்தலாம் !!!
கூடிய வரை மரக்கன்றுகள் நடலாம். ஆம், கூடிய வரை மரக்கன்றுகள் நடலாம். தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை பயன்படுத்தலாம் !!!