தூய்மை இந்தியாவும், நாறும் மனிதர்களும்:
தூய்மையை விரும்பாத மனித மனம் இருக்க முடியுமா?
தூய்மை என்பது புறம் சார்ந்தது மட்டுமல்ல அகம் சார்ந்ததும்தான்..எவ்வளவோ மேலை நாடுகளுக்குச் செல்கிறோம்,அதுபோல் நம் நாடு ஏன் இருப்பதில்லை?
விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே அசுத்தம் ஏற்படுத்தினால் தரப்படும் தண்டனைக்கு பயந்து தூய்மைவாதியாக மாறிவிடுகிறோம்.ஆனால் நம் நாட்டில் விமானம் இறங்கி நாம் வெளியேறிய உடனேயே நம் மனம் குப்பையாகி அசுத்தமாகி விடுகிறது.
உலக சுகாதார நிறுவனங்களால் தடைசெய்யப்பட்ட அத்தனை தொழிற்சாலைகளையும் நீங்கள் எங்கேயும் தேட வேண்டாம்.எல்லாமுமே நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.இந்தியா என்பது உலக நாடுகளின் பார்வையில் ஒரு குப்பை நாடு என்பதை எப்போது இந்த அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் புரிந்துக்கொள்ளப் போகிறார்கள்??
அமிலங்களையும் வேதிப்பொருள்களையும் உற்பத்தி செய்து தருகிற கடலூர் சிப்காட், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கான ஆடைகளை உற்பத்தி செய்து தருகிற திருப்பூர், தோல் தொழில்களை உள்ளடக்கிய காலணிகள்,தோல் ஆடைகளை உற்பத்தி செய்து தரும் ஆம்பூர்,வாணியம்பாடி,பேர்ணாம்பட்டு,ராணிப்பேட்டை பகுதிகளில் என இம்மூன்றையும் மட்டும் மதிப்புக்குரிய தூய்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய தலைமை அமைச்சர் அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மணிநேரமாவது சென்று பாருங்கள்..
1 மணிநேரம் கூட காற்றை உள்ளிழுத்து உயிர் வாழ முடியாத இம்மக்களின் நிலையை,புல் பூண்டு கூட முளைக்காத இம்மண்ணை,பாட்டில்களில் அடைக்கப்பட்டு எங்கிருந்தோ கொண்டுவரப்படும் தகுதியற்ற குடிநீர் என அனைத்தையும் பாருங்கள்.
இந்த இயந்திரங்கள் எல்லாம் உருவாக்கித் தந்த வெளிநாட்டுக்காரனுக்ககுத் இந்த நூலையும் ஆடைகளையும் உற்பத்தி செய்யத் தெரியாதா? தோல் காலணிகளும் ஆடைகளும் இல்லாமல் அவனால் வாழ முடியுமா? அவன் ஊரில் இந்தத் தோல் இல்லையா? அங்கேயே இதனை அவனால் உற்பத்தி செய்ய முடியாதா? கண்டுபிடித்த அமிலங்களும் வேதியியல் பொருட்களும் நம் நாட்டில் மட்டும்தான் உற்பத்தி செய்ய இயலுமா?
தூய்மையை எங்கிருந்து தொடங்கலாம் என்பதை இப்போது மக்களுக்கு சொல்லுங்கள் ஐயா!
-இயக்குனர் தங்கர்பச்சான்
(தி இந்து, 21-12-2014)
-------
நமக்கு முந்தைய தலைமுறையினர் நமக்காக தியாகங்கள் பல போராட்டங்கள் பல செய்து சுதந்திரம் பெற்று தந்து விட்டனர்.
இனி அடுத்த தலைமுறையினர்க்கு எதைக் கொடுத்துவிட்டு போகப்போகிறோம்?
மலடாகிவிட்ட மண்ணையும், நஞ்சான காற்றையும் கேடு விளைவிக்கும் தண்ணீரையுமா???
நாம் மாறினால்தான், நம் சமூகம் மாறும்.
சிந்தியுங்கள்!!!
நண்பர்களுக்கு பகிர்ந்து சூழல் மாற்றத்திற்கு வித்திடுவோம்..!