Mission and Vision


Mission and Vision

To strive to create a planet where the environment is not only taken care of, but loved. We hope to create a world that allows all life forms not just to survive, but thrive. We want to nurture Mother Earth and allow her to be the best that she can be. After all, this is our WORLD… if we don’t take care of it, who will?
VOYCE


மரங்களை நடுவோம்... பாதுகாப்போம்!


பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்க மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.
அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
வாய்ஸ் இயக்கம்

உடலுக்கு வலுவூட்டும் கத்திரிக்காய்


உடலுக்கு வலுவூட்டும் கத்திரிக்காய்
உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய், இதயத்தையும் பாதுகாக்கிறது.
பச்சை, வெள்ளை, அடர்நீலம் என பல நிறங்களிலும், முட்டைவடிவம், நீளவடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.
* கொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய்.
குறைந்த ஆற்றல் தரக்கூடியது.
100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது.
9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.
* ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.
* அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது.
இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும்.
புற்றுநோய், முதுமை, நரம்புவியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்தன்மை வழங்கும்.
* பி-காம்ப்ளக்ஸ் வகை வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (வைட்டமின் பி5), பைரிடாக்சின் (வைட்டமின் பி6), தயமின் (வைட்டமின் பி1), நியாசின் (வைட்டமின் பி3) ஆகிய அடங்கி உள்ளன.
கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த வைட்டமின்கள் அவசியமாகும்.
சமையலில் கத்திரிக்காய்
1 எண்ணெய்_கத்தரிக்காய்_குழம்பு :
கத்திரிக்காயை முழுசாக நடுவில் கீறி கீறி நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், மிளகு, சீரகம் போட்டு தாளித்து கொள்ளவும்.
பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்தரிக்காய் எல்லாம் போட்டு நன்கு 1/4 மணி நேரம் வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் புளிக்கரைசல், குழம்புப் பொடி, உப்பு போட்டு வேக விடவும்.
வெந்தவுடன் தேங்காய் விழுதை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
எண்ணெய் சற்று அதிகமாக ஊற்றினால் குழம்பு சுவையாக இருக்கும்.
2 கத்தரிக்காய்_பொரியல்:
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதில் பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது நிறம் மாறியதும் அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்து சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
கடைசியாக உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கத்தரிக்காய் வெந்ததும் அடுப்பை அணைத்து தேங்காய் துருவல் சேர்த்து பரிமாறவும்.
உடலுக்கு வலுவூட்டும் கத்தரிக்காய் பற்றி தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
பயனுள்ளதாயின் பகிர்ந்துகொள்ளுங்கள்

இயற்கை உணவு


இயற்கை உணவு
-இயற்கை அன்னை கொடுத்த மிகப்பெரிய பரிசு
இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அணுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.

எடுத்தவுடன் முழுமுயற்ச்சியாக மூன்று வேளையும் இயற்கை உணவுக்கு வரவேண்டும் என்பது நம் எண்ணம் அல்ல. முதலில் ஒரு வேளை இயற்கை உணவை நாம் பயன்படுத்திப் பார்த்து அதனால் கிடைக்கும் நன்மை என்ன என்பதைப் அனுபவப்பூர்வமாக பார்த்தாலே நமக்கு இதில் இருக்கும் அனைத்து உண்மைகளும் விளங்கும்.
பல நாடுகளில் மக்கள் இப்போது இயற்கை மருத்துவத்தின் மூலம் பல நோயை குணப்படுத்தியுள்ளனர் நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட நோய்வராமல் இருக்க நாம் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் மற்றும் காய், கனிகளைப் பயன்படுத்தி என்ன நோய்களை எல்லாம் குணப்படுத்தினார்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அவர்களின் அனுபவத்தையும் சேர்த்தே அளிக்க இருக்கிறோம். அனைத்து முக்கியமான நோய்களுக்கும் தங்கள் வீடுகளில் இருந்தே இயற்கை உணவைக்கொண்டு எப்படி எல்லாம் குணப்படுத்தலாம் என்பதைத் தான் இந்த “வாய்ஸ் மாதஇதழ்” தளத்தில்  விரிவாக பார்க்க இருக்கிறோம். இதற்கு அனைத்து தமிழ் மக்களின் அன்பையும் பேராதரவையும்  நாடுகிறோம். இயற்கை உணவின் மூலம் நீங்கள் பெற்ற அனுபவத்தை voycevishwa@gmail.com
இந்த இமெயில்  முகவரிக்கு அனுப்பி நம்மிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


மரம் ஒரு வரம்


மரம் ஒரு வரம்:
பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.
காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்வு, புவி வெப்பம் ஏற்பட்டு சில பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி உருவாகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும்போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.
இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நடவேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நடவேண்டும்.

காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில்  எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத் தன்மை, வளம் ஆகியவை, எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

மரம் நமக்கு என்ன தருகிறது?


மரம் நமக்கு என்ன தருகிறது?
மலர்கள், காய், கனிகள் தருகிறது
நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
காற்றை சுத்தப்படுத்துகிறது
நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.
ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.
ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அந்த செயற்கை பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது
ஒவ்வொரு மரமும் ஒரு வரம்
மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:
மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.
நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.
மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.
மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.
மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.
கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.
புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.
உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.
மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.