நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’
இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.
உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.
எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்.

Indian man single-handedly plants a 1,360-acre forest (and changes the story)


Indian man single-handedly plants a 1,360-acre forest (and changes the story)
Jadav Payeng turned a barren sandbar in northern India into a lush new forest ecosystem.
A little more than 30 years ago, a teenager named Jadav "Molai" Payeng began burying seeds along a barren sandbar near his birthplace in northern India's Assam region to grow a refuge for wildlife. Not long after, he decided to dedicate his life to this endeavor, so he moved to the site so he could work full-time creating a lush new forest ecosystem. Incredibly, the spot today hosts a sprawling 1,360 acres of jungle that Payeng planted — single-handedly.
The Times of India recently caught up with Payeng in his remote forest lodge to learn more about how he came to leave such an indelible mark on the landscape.
It all started way back in 1979, when floods washed a large number of snakes ashore on the sandbar. One day, after the waters had receded, Payeng, only 16 then, found the place dotted with the dead reptiles. That was the turning point of his life.
"The snakes died in the heat, without any tree cover. I sat down and wept over their lifeless forms. It was carnage. I alerted the forest department and asked them if they could grow trees there. They said nothing would grow there. Instead, they asked me to try growing bamboo. It was painful, but I did it. There was nobody to help me. Nobody was interested," says Payeng, now 47.
While it's taken years for Payeng's remarkable dedication to planting to receive some well-deserved recognition internationally, it didn't take long for wildlife in the region to benefit from the manufactured forest. Demonstrating a keen understanding of ecological balance, Payeng even transplanted ants to his burgeoning ecosystem to bolster its natural harmony. Soon the shadeless sandbar was transformed into a self-functioning environment where a menagerie of creatures could dwell. The forest, called the Molai woods, now serves as a safe haven for numerous birds, deer, rhinos, tigers and elephants — species increasingly at risk from habitat loss.
Despite the conspicuousness of Payeng's project, forestry officials in the region first learned of this new forest in 2008 — and since then they've come to recognize his efforts as truly remarkable, but perhaps not enough.
"We're amazed at Payeng," says Gunin Saikia, assistant conservator of Forests. "He has been at it for 30 years. Had he been in any other country, he would have been made a hero."

தூய்மை இந்தியாவும், நாறும் மனிதர்களும்!




தூய்மை இந்தியாவும், நாறும் மனிதர்களும்:
தூய்மையை விரும்பாத மனித மனம் இருக்க முடியுமா?
தூய்மை என்பது புறம் சார்ந்தது மட்டுமல்ல அகம் சார்ந்ததும்தான்..எவ்வளவோ மேலை நாடுகளுக்குச் செல்கிறோம்,அதுபோல் நம் நாடு ஏன் இருப்பதில்லை?
விமானத்தில் ஏறி அமர்ந்ததுமே அசுத்தம் ஏற்படுத்தினால் தரப்படும் தண்டனைக்கு பயந்து தூய்மைவாதியாக மாறிவிடுகிறோம்.ஆனால் நம் நாட்டில் விமானம் இறங்கி நாம் வெளியேறிய உடனேயே நம் மனம் குப்பையாகி அசுத்தமாகி விடுகிறது.
உலக சுகாதார நிறுவனங்களால் தடைசெய்யப்பட்ட அத்தனை தொழிற்சாலைகளையும் நீங்கள் எங்கேயும் தேட வேண்டாம்.எல்லாமுமே நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.இந்தியா என்பது உலக நாடுகளின் பார்வையில் ஒரு குப்பை நாடு என்பதை எப்போது இந்த அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் புரிந்துக்கொள்ளப் போகிறார்கள்??
அமிலங்களையும் வேதிப்பொருள்களையும் உற்பத்தி செய்து தருகிற கடலூர் சிப்காட், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கான ஆடைகளை உற்பத்தி செய்து தருகிற திருப்பூர், தோல் தொழில்களை உள்ளடக்கிய காலணிகள்,தோல் ஆடைகளை உற்பத்தி செய்து தரும் ஆம்பூர்,வாணியம்பாடி,பேர்ணாம்பட்டு,ராணிப்பேட்டை பகுதிகளில் என இம்மூன்றையும் மட்டும் மதிப்புக்குரிய தூய்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய தலைமை அமைச்சர் அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மணிநேரமாவது சென்று பாருங்கள்..
1 மணிநேரம் கூட காற்றை உள்ளிழுத்து உயிர் வாழ முடியாத இம்மக்களின் நிலையை,புல் பூண்டு கூட முளைக்காத இம்மண்ணை,பாட்டில்களில் அடைக்கப்பட்டு எங்கிருந்தோ கொண்டுவரப்படும் தகுதியற்ற குடிநீர் என அனைத்தையும் பாருங்கள்.
இந்த இயந்திரங்கள் எல்லாம் உருவாக்கித் தந்த வெளிநாட்டுக்காரனுக்ககுத் இந்த நூலையும் ஆடைகளையும் உற்பத்தி செய்யத் தெரியாதா? தோல் காலணிகளும் ஆடைகளும் இல்லாமல் அவனால் வாழ முடியுமா? அவன் ஊரில் இந்தத் தோல் இல்லையா? அங்கேயே இதனை அவனால் உற்பத்தி செய்ய முடியாதா? கண்டுபிடித்த அமிலங்களும் வேதியியல் பொருட்களும் நம் நாட்டில் மட்டும்தான் உற்பத்தி செய்ய இயலுமா?
தூய்மையை எங்கிருந்து தொடங்கலாம் என்பதை இப்போது மக்களுக்கு சொல்லுங்கள் ஐயா!
-இயக்குனர் தங்கர்பச்சான்
(தி இந்து, 21-12-2014)
-------
நமக்கு முந்தைய தலைமுறையினர் நமக்காக தியாகங்கள் பல போராட்டங்கள் பல செய்து சுதந்திரம் பெற்று தந்து விட்டனர்.
இனி அடுத்த தலைமுறையினர்க்கு எதைக் கொடுத்துவிட்டு போகப்போகிறோம்?
மலடாகிவிட்ட மண்ணையும், நஞ்சான காற்றையும் கேடு விளைவிக்கும் தண்ணீரையுமா???
நாம் மாறினால்தான், நம் சமூகம் மாறும்.
சிந்தியுங்கள்!!!
நண்பர்களுக்கு பகிர்ந்து  சூழல் மாற்றத்திற்கு வித்திடுவோம்..!

பூமித் தாய்க்கும் உரிமை உண்டு!



பூவுலகில் வாழ்வதற்கான உரிமை யாருக்கெல்லாம் இருக்கிறது? மனிதர்களுக்கு மட்டும்தானா? நிச்சயம் இல்லை. மனிதர்கள் மட்டும் இந்த உலகில் தனித்து வாழ்ந்துவிட முடியாது. எறும்பு போன்ற சிற்றுயிர்கள் முதல் யானை, திமிங்கிலம் போன்ற பேருயிர்கள், தாவரங்கள்வரை அனைத்தும் இந்தப் பூமியில் ஆரோக்கியமாக வாழ்ந்தால்தான், மனிதர்களும் வாழ முடியும்.
ஆனால், நாம் தற்போது வாழ்ந்துவரும் காலத்தைப் பல்வேறு உயிரினங்கள் வேகமாக அழிந்துவரும் '6-வது பேரழிவுக் காலம்' என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், மனிதர்களான நாம்தான்.
பொலிவிய சிந்தனை
இதைத் தடுத்து நிறுத்த உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொலிவியாவின் ஏவோ மொராலெஸ் தலைமையிலான இடதுசாரி அரசு வித்தியாசமாகச் சிந்தித்தது.
சூரியக் குடும்பத்தில் வேறு எந்தக் கோளிலும் எந்த உயிரும் வாழ முடியாது. பூமி மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே உயிர்ப்புள்ள கோள். பூமியை அதற்குரிய உயிர்ப்புடன் பாதுகாக்கப் பொலிவிய அரசு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. 'பூமித் தாயின் உரிமைகளுக்கான சட்டம்' என்ற அந்தச் சட்டம் 2010 டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. பூமியை, அதிலுள்ள ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை.
"நமது தாயான பூமி புனிதமானது, செழிப்பானது, உயிர் தருவது. பூமித் தாய் தனது கருவறையில் சுமக்கும் அனைத்து உயிர்களுக்கும் உணவு தருகிறது, பாதுகாக்கவும் செய்கிறது. பிரபஞ்சத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் பூமி, பிரபஞ்சத்துடன் நிலைத்த சமநிலையைப் பராமரிக்கிறது, ஒத்திசைவுடன் இருக்கிறது" என்று உலகிலுள்ள அனைத்துக்கும் ஆதாரமாகப் பூமியை அந்தச் சட்டம் வரையறுக்கிறது.
இந்தச் சட்டத்தின்படி பூமித் தாயும், பூமியில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும், சூழலியல் தொகுப்புகளும் உயிர்வாழ்வதற்கான வம்சாவழி உரிமையைப் பெற்றவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய அம்சங்கள்
பூமிக்கும் அதில் வாழும் உயிர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் என்ற அடிப்படையில், ‘பூமித் தாய்’ சட்டம் வலியுறுத்தும் முக்கிய அம்சங்கள்:
l இயற்கைச் செயல்பாடுகள் மற்றும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கான வாழ்க்கை ஒழுங்கை தொடர்வதற்கான உரிமை.
l எந்த உயிரிலும் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்கான உரிமை.
l இயற்கையின் முக்கிய உயிர் சுழற்சிகள், இயற்கை நடைமுறைகளில் மனிதர்கள் தலையிட்டு மாற்றம் ஏற்படுத்தாமல் இருக்கும் உரிமை.
l தூய குடிநீருக்கான உரிமை.
l தூய காற்றுக்கான உரிமை.
l வாழ்வை அதற்குரிய சமநிலை லயத்தோடு வாழ்வதற்கான உரிமை.
l உயிர்களுக்கு ஆபத்தான கதிரியக்கம், சுற்றுச்சூழல் மாசு-நஞ்சால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை.
l உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும், சூழலியல் சமநிலையையும் குலைக்கும் எந்தப் பிரம்மாண்டக் கட்டுமானம், வளர்ச்சித் திட்டத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை.
l மேற்கண்ட அம்சங்கள் ஒவ்வொன்றும் மக்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கின்றன.
இயற்கையுடன் இணக்கம்
இந்தச் சட்டத்தை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் நம்முடைய நுகர்வு முறை, அன்றாட பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் தலைகீழ் மாற்றங்கள் தேவை. நாம் ஒவ்வொருவரும் இயற்கையைச் சீர்கெடுக்காத நடைமுறைகளுக்கு மாறுவதே அதற்கு நிரந்தரத் தீர்வு. அறஉணர்வுடனும் உள்மனம் சார்ந்த விழிப்புடனும் வாழ்க்கையை வாழ இந்தச் சட்டம் வழிகாட்டுகிறது.
உலகில் ஒரு மனிதன் நன்றாக வாழ்வது என்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்குத் திருப்தியைத் தரும் அதேநேரம், ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சியையும் தர வேண்டும் என்பதை இந்தச் சட்டம் சுட்டிக்காட்டுகிறது.
தொடக்கப் புள்ளி
அதேநேரம் பொலிவியாவின் பொருளாதாரம் பெருமளவு ஏற்றுமதியையே சார்ந்துள்ளது. அந்நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதம் கனிமங்கள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவைதான். இவை சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தொழில்கள்தான் என்றாலும், இவற்றைச் சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக மாற்றும் முயற்சியின் தொடக்கமாக இந்தச் சட்டத்தைக் கொள்ளலாம்.
தாங்கள் வாழ்வதற்காகச் சுற்றுச்சூழலை சீர்கெடுப்பதை நிறுத்த வேண்டும். இயற்கையோடு, பூமியோடு இணக்கமாக வாழ வேண்டும் என்ற சிந்தனையை நடைமுறைப்படுத்துவதற்கான தொடக்கப் புள்ளி இந்தச் சட்டம். இந்தச் சட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது பொலிவியாவின் பொருளாதாரத்தையும் சமூகச் சூழ்நிலையையும் மேம்படுத்தும்.
அதேநேரம் தங்கள் நாட்டைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், ஒட்டுமொத்த உலகத்தின் நலனையும் கணக்கில் கொண்டு பொலிவியா இயற்றியுள்ள இந்தச் சட்டம், உலகளாவிய சிந்தனை என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

தண்ணீர் மனிதர் - ராஜேந்திர சிங்


தண்ணீருக்கான நோபல் பரிசு என்று அறியப்படும் ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது இந்தியரான ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங், நமது நாட்டின் பாரம்பரிய மழை நீர் சேகரிப்பு முறைகளை கடைப்பிடித்து தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த ஆயிரம் கிராமங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தந்ததை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகுக்கே வழிகாட்டி
‘நீர் வளத்தைக் காக்கவும் மேம்படுத்தவும் ராஜேந்திர சிங் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கிறது. மண்வளத்தை மேம்படுத்துகிறது. நதிகளை அழிவில் இருந்து காப்பாற்றுகிறது.
வன விலங்குகளும் வாழ வழி செய்கிறது. மேலும் தண்ணீர் வளத்தை பெருக்க அவர் மேற்கொள்ளும் வழிமுறைகள் மிகவும் எளிமையானது, சிக்கனமானது. உலகம் முழுவதுமே அவரது நீர் மேலாண்மை திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும். இயற்கையை நாம் சீரழிப்பதால் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் மோசமான இயற்கை சீற்றங் களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலகில் சுத்தமான குடிநீருக்கான தேவை அதிகரித்து வருகிறது.
தண்ணீர் பிரச்சினையை அறிவியலாலும், தொழில் நுட்பத்தாலும் மட்டும் தீர்த்துவிட முடியாது. அரசு நிர்வாகத்தில் மனிதாபிமானத்துடனான அணுகு முறை, சிறந்த திட்டமிடல், சமூக ஒற்றுமை, சிறப்பான நீர் மேலாண்மை கொள்கை ஆகியவை வேண்டும்.
இந்த நிலையில் ராஜேந்திர சிங் நமக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்’ என்று விருதுத் தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 1991-ம் ஆண்டு முதல் ஸ்டாக்ஹோம் நீர் மேலாண்மை விருது வழங்கப்பட்டு வருகிறது.
பணியின் தொடக்கம்
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திர சிங்குக்கு வயது 55. ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டப்படிப்பு முடித்த அவர், ராஜஸ்தான் மாநிலத்தில் பணி நியமனம் பெற்றார். வறட்சியான அப்பகுதி மக்களின் முதல் தேவை குடிநீர் என்பதை உணர்ந்து கொண்ட ராஜேந்திர சிங் அதனை ஏற்படுத்தித் தருவதற்கான முயற்சியில் இறங்கினார்.
இந்தியாவின் பாரம்பரிய நீர் சேகரிப்பு முறைகளை நவீன முறையில் செயல்படுத்தி சுமார் ஆயிரம் கிராமங்கள் பயன்படும் வகையில் ஏராளமான தடுப்பணைகளையும், குளங்களையும் அமைத்தார். நீர் வளத்தை இழந்து மடிந்து கொண்டிருந்த பல ஆறுகள் இவரது தீவிர முயற்சியால் புத்துயிர் பெற்றன.

தொடரும் சேவை
தருண் பாரத் சங் என்ற அரசு சாரா அமைப்பை நிறுவிய ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நீர் வளத்தை மேம்படுத்தி வருகிறார்.
ராமன் மகசேசே விருது, ஜம்னலால் பஜாஜ் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என்று அழைக்கப்படுகிறார்.
வாழ்க்கை லட்சியம்
தனது பணி குறித்து ராஜேந்திர சிங் கூறியது: முதலில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியை தொடங்கினோம். இப்போது அப்பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. இப்போது எங்கள் லட்சியம் மிகவும் உயர்ந்ததாக உள்ளது.
இப்போது இயற்கையை மாசுபடுத்துதல், சுரண்டுவது அதிகமாகிவிட்டது. இதனைத் தடுப்பதும், தண்ணீருக்காக ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து, அனைவருக்கும் நீர் வளம் கிடைக்கச் செய்வதும்தான் எனது வாழ்க்கை லட்சியம் என்றார்.
பிரிட்டனைச் சேர்ந்த நீர்வளத்துறை பொறியாளர் கேத்தரீன் பாய்காட், ராஜேந்திர சிங்கின் உதவியுடன் தங்கள் நாட்டில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ராஜேந்திர சிங்கின் பணிகள் குறித்து அவர் விருதுக் குழுவுக்கு தெரிவித்தார். இதன் அடிப்படையில் ராஜேந்திர சிங் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

Lou Holtz





Earth Day | Save Earth


ஜார்ஜ் பெர்னாட் ஷா


பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்;
அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், 
அவர்களே உருவாக்குகிறார்கள்.

ஜார்ஜ் பெர்னாட் ஷா

Success



1.   உங்களிடம் உள்ள திறமையைக் கண்டறியுங்கள்.
2.    உன்னிடம் நம்பிக்கை வை உயரலாம்.
3.    எந்தச் செயலையும் தொடங்குவதைவிட தொடர்ந்து இருப்பதே சிறந்தது.
4.    
உங்களது உன்னதத் தீர்மானங்களை முடிவு செய்யுங்கள்.
5.    உங்களிடம் உள்ள தடைகளை அகற்றுங்கள்.
6.    சரியான முறையில் செயல்திட்டமிட்டு, உரிய நேரத்தில் செய்தால் வெற்றி நிச்சயம்.
7.    சரியான இலக்கு, நேர்மையான திட்டம், விரைவான செயல்பாடு இவை வெற்றியின் தாரக மந்திரம்.
8.    பொறுப்புணர்ந்து கடமையுணர்வுடன் அனைத்தையும் செய்யுங்கள்.
9.    உங்களது வார்த்தைகளிலும், செயல்களிலும், நம்பிக்கையும், நேர்மையும் முதன்மையாக இருக்கட்டும்.
10.    எந்த நல்ல செயலையும் தள்ளிப் போடாமல் உடனே செய்யுங்கள்.

தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி தாத்தா!


தரிசு நிலத்தை சோலையாக்கும் இயற்கை விஞ்ஞானி தாத்தா
500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மரவிதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?
"திடீர்னு ஒருநாள் எங்க வீட்டுத் தென்னந்தோப்புல இருந்த மரங்கள் எல்லாம் காய்ஞ்சு விழுறாப்பல கனவு கண்டேன். கனவைச் சொல்லி 'மாற்றுப் பயிரை பத்தி யோசிக்கணும்'னு நான் சொன்னத யாரும் நம்பல. எல்லாரும் சிரிச்சாங்க. ஆனா ஒருநாள், கனவு கண்டமாதிரியே என் கண்ணு முன்னாடியே எல்லா மரங்களும் கழுத்தொடிஞ்சு காய்ஞ்சு விழுந்துருச்சு. பக்கத்து தோட்டத்துலயும் அப்படித்தான்!
என்னை உதாசீனப்படுத்துனவங்க மேல கோபமும் ஆத்திரமும் வந்துச்சு. பக்கத்துல இருக்கிற மலங்காட்டுக்குள்ள போய்ட்டேன். காட்டுக்குள்ள கெடச்ச நெல்லி, புளின்னு மரவகை உணவுகளை உண்டு திரிஞ்சேன். இருபது நாள் கழிச்சு மீண்டும் ஊருக்குள்ள வந்தப்ப, பைத்தியக்காரன பாக்குறாப்புல பாத்தாங்க. அதுக்கப்புறம் ஜனங்க என்னை பரிகாசம் பண்றப்ப எல்லாம் வனவாசம் போக ஆரம்பிச்சேன். காடுகளை சுவாசித்து மரங்களோட பேசிப் பேசி நான் இன்னைக்கி இப்படி இருக்கேன்"
முற்றும் துறந்த முனிவர் போல பேசும் விவசாயி இ.ஆர்.ஆர்.சதாசிவத்துக்கு 73 வயது. கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் 1997ல் இந்திய அரசின் இந்திரா பிரியதர்சினி விருஷ்சமித்ர விருது பெற்றவர். கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றத்தை தடுத்தால், அங்கேயே அவர்களது ஜீவாதாரத்துக்கான வழிவகை களைப் பெற்றுத் தந்தால், காடு வளர்ப்பில் புவி வெப்பமயமாதலை தடுத்தால் பாலைவனத்தில்கூட பலன்தரும் மரங்களை வளர்க்க முடியும் என்பதை நிரூபித்தவர்.
எதற்கும் உதவாது என்று வல்லுநர்களே ஒதுக்கித் தள்ளும் நிலங்களை பொன்விளையும் பூமியாக மாற்றுகிறார் சதாசிவம். திருச்சி டு தஞ்சாவூர் சாலையில் செங்கிப்பட்டி அருகே உள்ள மு.சோலகம்பட்டி கிராமத்தில், தன் நண்பர்கள் துணையோடு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார். மண்ணின் தரத்துக்கு ஏற்ப மா, பலா, தேக்கு, ஈட்டி, செஞ்சந்தனம், பேரீச்சை என விதவிதமான மரங்களை நட்டார். மூன்று இடங்களில் தலா பத்து ஏக்கரிலான குளங்களை வெட்டி அதில் மழை நீரை சேமித்தார். சுயதேவைக்கு சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்தார். தரிசாகக் கிடந்த அத்தனை ஏக்கரும் சோலைவனமானது. சதாசிவத்தின் சோலைவனத்துக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் பலர் வந்து பாடம் படித்துக் கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனைகளையும் அள்ளி வழங்குகிறார் சதாசிவம்.
"எனக்கும் மரங்களுக்குமான உரையாடல் ஏழு வயசிலேயே ஆரம்பிச்சிருச்சு.எதுவும் பேசாம நிக்கிறவங்களைப் பார்த்து, 'ஏன் மரம் மாதிரி நிக்கிற?'ன்னு கேப்பாங்க. பலரும் நெனைக்கிற மாதிரி மரம் ஜடமில்லை. அவை ஏதோ ஒன்றை மனிதனுக்கு சொல்ல விரும்புது. இதை நான் சொன்னப்போ ஒருமாதிரியா பார்த்தாங்க. இது சொன்னா புரியாது. அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும். மரங்களை நேசிக்க வேண்டியது நம்ம கடமை. இது புரியாம, மத்தவங்க பரிகாசம் செஞ்சத என்னால தாங்கிக்க முடியல. காட்டுக்குள்ளே போய் மரங்களோட மரங்களா குடியிருக்க ஆரம்பிச்சேன். அப்பா, அம்மா காட்டுக்குள்ளே இருந்து புடிச்சுட்டு வந்து படின்னு அனுப்புவாங்க. அடிக்கடி நான் காட்டுக்குள்ள ஓடுனதால பெத்தவங்களும் ஒரு கட்டத்துல பேசாம இருந்துட்டாங்க.
காட்டுக்குள்ள சுத்தும்போதுதான் ஒவ்வொரு மரத்தோட தன்மை, குணாம்சம், அது நம் உயிர் மண்டலத்துக்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்குன்னு தேடித்தேடி படிச்சேன். ஆராய்ச்சியும் பண்ண ஆரம்பிச்சேன். காய்கறிகளில் கத்திரிக்காய், முள்ளங்கி போல, காடுகள்லயும் மரக்கத்திரிக்காய், மரத்தக்காளி எல்லாம் உண்டு. 500 ஆண்டுகளுக்கு முன்பு மெசபட்டோமியா, ஈராக் போன்ற நாடுகளில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்கள் சந்தன மர விதைகளையே ஆறு மாதங்கள் உண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த சந்தன விதைகளை பொடி செய்து உப்புமா கிண்டலாம். லட்டு செய்யலாம். மாவா அரைச்சு தோசை சுடலாம். இப்படி மனிதனுக்கு நேரடியாக உணவளிக்கும் 240 மர வகைகள் இருக்குன்னு யாருக்காச்சும் தெரியுமா?
கோவையில் சிறுவாணி, போளுவாம்பட்டி, தடாகம், மாங்கரை, பல்லடம், சூலூர், உடுமலை, பெருந்துறை சுற்று வட்டார கிராமங்கள்ல உள்ள தரிசு நில விவசாயிகளிடம் பேசி இந்த மரப்பயிர்களை வேளாண்மை செய்ய ஆரம்பித்தேன். அதில் நான் கண்டது நிரூபணமானது. அதை ஒட்டுமொத்தமா ஒரே இடத்துல செய்து காட்டணும். நான் உருவாக்கியதை இந்த உலகுக்கு அர்ப்பணிக்கணும்ற நோக்கத்தோடுதான் இங்கே இந்த காடுகளை உருவாக்கினேன்"என்கிறார் சதாசிவம்.
தேக்கு, செஞ்சந்தனம், ஈட்டி உள்ளிட்ட 200 வகை மரங்கள் வளர்ந்து செழித்து நிற்கும் சதாசிவத்தின் இந்த சோலைவனம் இயற்கை ஆர்வலர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான்!

ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி…!


ஆறாயிரம் மரங்களை வளர்த்து வரும் மரம் வெட்டி…! 

ஒரு காலத்தில் மரத்தை வெட்டி பிழைப்பை நடத்தியவர், மரம் வெட்டியது…தவறு என்று உணர்ந்து, இப்போது மரக்கன்றுகளை சுற்றுப்புறத்தில் நட்டு வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாதான் அவர்.‘‘பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கு கூட ஒதுங்குனது இல்ல சாமி, எனக்கு தொழிலே குழி வெட்டுறதும், மரம் வெட்டுறதுதான். 30 வருசமா மரத்தை மட்டும்தான் வெட்டினேன், எனக்கு ஒரே ஒரு பையன்தான். மரம் வெட்டித்தான் பையனை வாத்தியாருக்குப் படிக்க வச்சேன். வாத்தியார் வேலை கிடைச்சதும், ‘இனிமேல் மரம் வெட்டல்லாம் போக வேண்டாம் வீட்டுல ஓய்வு எடுங்கனு!’ சொல்லிட்டான். நானும் ஒருவாரம் வீட்டுல சும்மா இருந்து பாத்தேன். என்னால இருக்க முடியலை, நேரமும் போகலை. வாராவாரம் என்னைப் பாக்க மகன் வந்திடுவான். ‘மரம் வெட்டித்தான என்னைப் படிக்க வச்சீங்க… எத்தனை மரம் வெட்டுனீங்களோ அத்தனை மரம் நடுங்க. மரம் வெட்டுறது பாவம், அந்தப் பாவத்தை பிழைப்புக்காக செஞ்சுட்டீங்க, இனிமேல் மரம் நடுங்கன்னு!’ பாடம் சொன்னான். கட்டிலில் படுத்திருந்த நான், எந்திரிச்சு உட்கார்ந்து மகன் சொன்னதை நினைச்சுப்பாத்தேன். ‘‘அட.. நிழல் கொடுத்திக்கிட்டுருந்த எத்தனை மரங்களைக் கட்டடம் கட்டுறதுக்கும், மரப்பலகை போடுறதுக்கும் வெட்டி சாய்ச்சு காசு வாங்கிருக்கோம், இனிமேல் மரத்தை நடுறது மட்டும்தான் நம்ம குறிக்கோள்’’னு முடிவெடுத்தேன். மறுநாளே மரம் வெட்ட பயன்படுத்துன கோடாரியை வித்துட்டு மண் வெட்டி, சட்டி, கடப்பாறை, பூவாளி, களைக்கொடத்தின்னு மரம் நட தேவையான சாமான்களை வாங்கியாந்தேன். அதோட அஞ்சு வேம்பு கன்னுகளையும் கையோட எங்க ஊருக்குள்ளயே நட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. ”இவ்வளவு காலமா…. ஒத்த மரம் கூட விடாம வெட்டிட்டு இப்போ என்ன புதுசா மரம் நடுற.. ’’ன்னு கிண்டலாப் பேசுனாங்க.. ஆனா, அதையெல்லாம் காதுல வாங்காம மரக்கன்னுகள நட ஆரம்பிச்சேன், சிலர் வேணும்னே கன்னை பிடுங்கிப் போட்டுருவாங்க, நூறு கன்னு வச்சா… அதுல பத்து வளர்ந்து வந்தாக்கூட சந்தோசம்தான் எனக்கு. மகன் மாசம் ரெண்டாயிரம் ரூபாயை செலவுக்காக தருவான். அதுல முந்நூறு ரூபாயைத் துண்டா ஒதுக்கி பாண்டியன் கிராம பேங்குல போட்டு வச்சுடுவேன். தேவைப்படும் போது அதை எடுத்து மரக்கன்னுகளை வாங்குவேன். கோடை காலத்துல வாடகைக்கு வண்டி தண்ணி ஊத்துறதுக்கும் வச்சுக்குவேன். முதல்ல கன்று பதினைஞ்சு ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் விலைக்கு வாங்கித்தான் நட்டுட்டு வந்தேன். அப்புறம், வயக்காடு, காடுகரை, கம்மாய்னு போகும் போது கண்ணுல அரசு, வேம்பு..ன்னு ஏதாவது செடிகள் தென்பட்டா… அப்படியே வேரோடப் பிடுங்கி பாக்கெட்டுல மண்ணைப் போட்டு நிரப்பி வீட்டுக்கு கொண்டு வளர்த்து, நடுவேன். இதுக்காக எப்பவுமே பத்து பிளாஸ்டிக் பேப்பரை, டவுசர் பையில போட்டு வச்சிருப்பேன். யாரு கன்றுகள் கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம கொடுத்திடுவேன். ஆனா, நூறு கன்னு கேட்டா இருபத்தைந்து கன்னுகள்தான் கொடுப்பேன். கேட்டதை விடக் குறையா கன்னுகள் கொடுத்தாத்தான் இருக்குறத வச்சு ஒழுங்கா தன்ணீர் ஊத்திப் பராமரிப்பாங்க. அப்போதான் மரத்தோட அருமை தெரியும். பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் காலேஜ், முதியோர் இல்லம், ராஜபாளையம் அரசு மருத்துவமனை, அக்கம்பக்கத்து கிராமங்கள்னு இதுவரைக்கும்…ஆறாயிரம் மரக் கன்னுகளை நட்டுருக்கேன். இப்போ எனக்கு வயசு 76 ஆனாலும் என்னோட ஆயுசு வரைக்கும் மரம் நடுவேன். யாரும் மரத்தை வெட்டாதீர்கள்.. அது பாவம்.. நமக்கு நிழல் தருது, காற்றை சுத்தமாக்குது. மரத்தை பாத்தா மனசு இளகும். அதனால யாரும் மரத்தை வெட்டாதீங்க” என்று வேண்டுகோள் வைத்தார்

உலக பூமி தினம்


உலக பூமி தினம் ( World Earth Day )   22.04.2015

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு".

இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம். இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது. இதை உணர மறக்கிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது.
நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது . பூமியின் முதல் எதிரி யார்?சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் என்ற பெயரிலும், 
கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம். இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும். இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய
நன்மையையும்பெரிய தீமையையும் கொண்டிருக்கும். நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும்
இயற்கைக்கு எதிராகவே உள்ளது. இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை .
நமது பயன்பாடும்வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. விளைவுபூமியே ஒரு பெரிய
குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம். இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை. மிகவும் குறைவு. பயன்படுத்தியபின் தூக்கி எறி (Use and Through) கலாச்சாரம்தான் இன்றைய
உலகை இயக்குகிறதுஇந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான். ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடும் 
சூழல்தான் இன்று உள்ளது. நிலம்நீர், காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது. நம்
மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொள்கிறோம். நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்லபூமியில்
எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான்அதற்கு நாம் மட்டுமே காரணம். 
இதற்கு என்ன செய்யலாம்?


Reduce - குறைக்க வேண்டும் :
பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும்.


Reuse - மீண்டும் பயன்படுத்த வேண்டும் :
நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த
முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ மறுசுழற்சிக்கோ போட வேண்டும்.


Recycle - மறுசுழற்சி செய்ய வேண்டும் :
மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும். அது மிகச்
சிறிய பொருளாக இருந்தாலும் சரி. 
Restore - மீண்டும் சேமிக்க வேண்டும் :
இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க
வேண்டும். உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும். இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாதுமுடிந்த அளவுக்கு இந்த
விசயங்களை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள். நான் ஒருவன் மட்டும் மாறுவதால் என்ன
நடந்து விடப்போகிறது? என்று ஒருபோதும் எண்ண வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்று படுவோம். பூமியைக்
காப்பாற்றுவோம்!